ஜா -எல நகரில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிய 11 மசாஜ் நிலையங்களில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது 27 யுவதிகளைக் கைது செய்துளள்னர்.
இதன்போது குறித்த மசாஜ் நிலையங்களை நடத்திய குற்றச்சாட்டில் 6 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழைமை (16) நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கமைய, கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதிக்கு முன்பாக ஜா -எல நகரில் இயங்கி வந்த சட்டவிரோத மசாஜ் நிலையங்கள் மற்றும் ஏக்கல, தடுகம, துடெல்ல வெலிகம்பிட்டிய ஆகிய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டே இவர்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.