நாட்டில் நேற்று (28) காலை வரையான 24 மணிநேரத்தில் 07 சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் 17 ,18 வயதுடைய சிறுவயதினர் என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள 07 சம்பவங்களில் 04 சம்பவங்கள் பலவந்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று சம்பவங்களும் காதல் தொடர்புகளினால் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 14, 15, 16 மற்றும் 17 வயது நிரம்பிய சிறுமியரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பூஜாபிட்டிய, மருதானை, கொட்டவெஹெர, தும்மலசூரிய, பதவிய, மிட்டியாகொட, யட்டவத்த ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்தச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.