வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவேளை ராஜகுமாரி என்ற பெண் உயிரிழந்தமைக்கு நீதிகோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறவேண்டுமென ஆர்ப்பாட்ட்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் வெலிக்கடை பொலிஸில் கொல்லப்பட்ட வீட்டுப்பணிப்பெண்ணான ஆர். ராஜகுமாரிக்கு நீதி, விசாரணையை விரிவுபடுத்து, ஆர். ராஜகுமாரியின் கொலையாளிகளை அம்பலமாக்கு, வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளை சட்டபூர்வமாக்கு போன்ற வாசங்களை எழுதிய பதாதைகளை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.