Our Feeds


Wednesday, May 10, 2023

ShortNews Admin

VIDEO - ‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது, கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன குழு தாக்குதல்: பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில்



கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவினால் தாக்கப்பட்ட நிலையில், சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, செய்திகள் வெளியாகியுள்ளன.


சந்திக அபேரத்ன மற்றும் அவரின் கையாட்கள் நடத்திய கொடூர தாக்குதல் எனக்கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.


கடந்த ஆண்டு நடைபெற்ற ‘அறகலயா’ எனக் கூறப்படும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் தற்போது தாக்குதலுக்குள்ளான பியத் நிகேஷல முக்கிய பங்கு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »