கொழும்பு கல்கிசை St.Thomas கல்லூரியின் 2023ம் ஆண்டுக்கான தமிழ் நாடக மன்றம் நடத்திய நாடக விழா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் 06.05.2023 அன்று கல்லூரியின் நாடக மன்ற பொறுப்பாசிரியர்களான திரு.ஜி. நேசசீலன், திருமதி.எஸ் வதனதாசன் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக IDM Nations கெம்பஸ் சர்வதேச நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைமை அறங்காவலருமான கலாநிதி. வி.ஜனகன் அவர்கள் கலந்து சிறப்பித்து நாடகப் போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி வைத்ததுடன், மாணவர்கள் எதிர்காலத்தில் தங்களின் இலட்சியத்தை அடைய வேண்டுமானால் சில குறிக்கோளை முன்னிறுத்தி செயற்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உரையாற்றும் போது சுட்டிக்காட்டினார்.
மற்றும் இவ்விழாவில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.