எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றைய (16) தினம் கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொருளாலர் பதவிக்கும்,
கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் பதவிக்கும் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டனர்.
குறித்த பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்க்கட்சித் தலைவரால் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.