2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுக்கு 80,272 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் குறித்து மேலும் விசாரிக்க விரும்பினால், பரீட்சை திணைக்களத்தின் பாடசாலைகள் பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறு கிளையை தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.