தம்மை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இலங்கை விமானப்படைத் தளபதி எடுத்த தீர்மானத்தை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி, ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் சஞ்சீவ துய்யகொந்த, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசியல் மேடையில் கருத்து தெரிவித்ததன் விளைவாகவே இந்த கறுப்புப் பட்டியல் தனது பெயர் இடம்பெற்றதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது நடவடிக்கையின் மூலம் இலங்கை விமானப்படையின் கெளரம் ஒருபோதும் மீறப்படவில்லை என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, மனுவில் பிரதிவாதிகளாக இலங்கை விமானப்படைத் தளபதி, அதன் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.