பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் பிரேரணைக்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் எதிராக வாக்களித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் சுமார் மூன்றரை கிலோ தங்கத்தை இலங்கைக்குள் கொண்டு வந்த போது சுங்கப் பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு அதற்கான அபராதத் தொகையை செலுத்திய ரஹீம் எம்.பி இன்று பாராளுமன்றத்திற்கு வந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், ஏ.எச்.எம்.பௌசி, குமார வெல்கம ஆகியோர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை விசேட அம்சமாகும்.