தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மனு எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.