தங்கம் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அந்தத் தங்கம் தனக்கு சொந்தமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
“அந்த பொருட்கள் என்னுடைய நண்பருக்கு சொந்தமானது. ஆனால் நாளின் அதற்காக நான் குற்றஞ்சாட்டப்பட்டேன்” என்று நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறினார்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகிய இருவருமே இந்தப் பிரச்சினையில் நான் சிக்கியபோது – என்னைக் காப்பாற்ற முன்வராத காரணத்தினால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.