இந்தியாவின் மணிப்பூர் முழுவதும், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் 8 மாவட்டங்கள் உள்ளடங்கும் வகையில் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடியின சமூகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் அமைப்பொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியின ஒற்றுமை போராட்டத்திலேயே வன்முறை ஏற்பட்டுள்ளது.
டோர்பாங் பகுதியில் பழங்குடியின மக்களுக்கும், பழங்குடியினோர் அல்லாதவார்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் பின்னர் வன்முறையாகியுள்ளது.
இதையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இன்று மணிப்பூர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்த இணைய சேவைகள், மணிப்பூர் முழுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதிக்கு இராணுவ வரவழைக்கப்பட்டு, நிலைமையை கட்டுபடுத்த முயற்சித்து வருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்முறையை தோற்றுவிப்போர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்த பாதுகாப்பு பிரிவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.