கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று பல இடங்களுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் திலின கமகே தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் அலரி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.