மாகாணங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களிலும் GPS கருவிகளைப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்டுள்ள, மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் மூன்றில் ஒரு வீத பஸ்களில் GPS கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய, 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம், மாகாணங்களுக்கிடையிலான சேவையில் ஈடுபடும் GPS கருவிகள் பொருத்தப்பட்ட பஸ்களைக் கண்காணிக்க முடியும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
தனியார் பஸ்களில் மாத்திரமன்றி இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களிலும் GPS கருவிகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பஸ் தரிப்பிடங்களில் அதிக நேரம் பஸ்களைத் தரித்து நிற்கச்செய்ய முடியாத நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.