உலகை உலுக்கி வந்த கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், கனடா, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் அமைப்பான 'G-7 ' அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு நேற்று ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் உலகத் தலைவர்களாக வலம் வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி மேனுவல் மேக்ரான், ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்சேல் கலந்து கொண்டுள்ளனர்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மோடியும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார்.
மேலும், தென்கொரியா, அவுஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு ஆகியவற்றின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் தொடக்கத்தில் உக்ரைன் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.