சைபர் கிரைம் (Cyber Crime) குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.
அந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் தெரிந்தோ தெரியாமலோ கணினி குற்றத்தில் ஈடுபட்டால்
சட்டத்தின் மூலமான பாதுகாப்பு மற்றும் சட்டத்தினால் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
காலத்தின் அவசியமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வாசலில் இருக்கும் மாணவர்கள் அதனால் ஆபத்திலும் உள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டே மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்து கல்வி கற்பிக்க தீர்மானித்ததாக மேலும் குறிப்பிடப்படுகின்றது.