சகோதரி முனவ்வராவை தேடியது இறுதியில் சோகத்தில் முடிந்தது... கொலை செய்து புதைக்கபட்ட நிலையில் ஜனாஸா மீட்பு
07.05.2023 அன்று காலை 08:15 மணியளவில் கெலிஓயவிற்கு வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற சகோதரி முனவ்வரா ஜின்னா அவர்களை கடந்த 6 நாட்களாக காணவில்லை என உறவினர்கள் , போலீசார் தேடி வந்த நிலையில் அவர் காட்டுக்குள் கொலை செய்ய்யபட்டு புதைக்கபட்ட நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சகோதரி பழைய எல்பிட்டியை சேர்ந்தவர். (பழைய எல்பிட்டி - வெலிகல்ல, கண்டி மாவட்டம்)
இந்த யுவதி, கெலிஓயா நகரிலுள்ள பாமசியில் பணியாற்றுக்கின்றார் என யுவதியின் சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்தார்.
பணியாற்றும் இடத்துக்குச் செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வீட்டிலிருந்து புறப்பட்டு, பஸ்ஸூக்காக மட்டும் தன்னிடம் 100 ரூபாயை வாங்கிச் சென்றார் என்று அவரின் சகோதரர் தெரிவித்துள்ள நிலையில் அவர் எல்பிட்டியவில் வைத்து காட்டுக்குள் இழுத்து செல்லப்ட்ட்டு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவன் பொலிசில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை விசாரித்ததில், அவர் அப்பகுதியில் ஆடு வளர்த்து வருவது தெரிய வந்தது. ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது, குறித்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். அவர் மறுத்ததால், சந்தேக நபர் அவளை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
மேலும், அவர் அங்கேயே கொல்லப்பட்டதாகவும், கொலையின் பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதாகவும், ஆனால் சடலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு திடீரென பொலிஸார் விரைந்துள்ளனர்.
Fathima Munawwara என்ற இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ள நிலையில், பொலிஸாரின் இந்த செயற்பாடு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.