மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகப் பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.