ஸ்பெயினின் மேற்குப் பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவியுள்ளது. குறித்த பகுதியில் பரவிய தீயை தீயணைப்பாளர்கள், இராணுவ வீரர்களின் உதவியுடன் அணைக்க முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கிராமங்களிலிருந்து குறைந்தது 550 பேர் தீ அபாயத்தினால் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
275-க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள், நீர் பாய்ச்சும் 14 விமானங்கள், சுமார் 165 இராணுவ வீரர்கள் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சி இடம்பெற்றது.
இதுவரை 1,500 ஹெக்டர் நிலம் தீயில் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.