Our Feeds


Monday, May 8, 2023

SHAHNI RAMEES

ஈரானால் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கி கொண்டுள்ள இலங்கையர்கள்

 

ஈரானால் அண்மையில் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பலின் பணியாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.



நேற்று தி அசோசியேட்டட் பிரஸ் (AP) ஆய்வு செய்த செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, ஈரானிய கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட 2 எண்ணெய் கப்பல்கள், ஈரானின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான ஹார்முஸ் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ளன.



குறித்த 2 கப்பல்களும் வெவ்வேறு  காரணங்களுக்காக கைப்பற்றப்பட்ட போதிலும், அணுசக்தி திட்டம் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் கைப்பற்றப்பட்டவையாகும் என்பது தெளிவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த புதன்கிழமையன்று, ஈரானின் துணை இராணுவப் புரட்சிக் காவலர்களால், இரண்டாவது கப்பலான பனாமாவின் நியோவி கப்பல், ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள புஜைராவுக்குச் செல்லும்போது கைப்பற்றப்பட்டது.



இந்தக் கப்பலிலேயே, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை கடற்படையினர் பணியாற்றியதாக கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »