பண்டாரகமவில் உள்ள மின்சார உபகரணகள் விற்பனைக் காட்சியறையில் பெண் ஒருவர் மடிக்கணினியைத் திருடிய காட்சிகள் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளன.
குறித்த மடிக்கணினியின் பெறுமதி சுமார் 2 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
மின்சார உபகரணம் வாங்குவதாக கூறி வந்த குறித்த பெண், வர்த்தக நிலைய ஊழியர்களிடம் தனது கணவர் வரும் வரை அங்கேயே இருப்பேன் என கூறிய நிலையிலேயே மடிக்கணினியை திருடியுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.