Our Feeds


Thursday, May 25, 2023

ShortNews Admin

மர்மமாக உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டரின் உடல் இன்று தோண்டி எடுக்கப்படுகின்றது!



மர்மமாக முறையில் உயிரிழந்த பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டரின் உடல் இன்று தோண்டியெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஐவரடங்கிய விசேட வைத்திய குழாம் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக, தினேஸ் ஷாப்டரின் உடலை தோண்டியெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீது இரண்டாவது தடவையாகவும் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பொரளை பொது மயானத்தில் அவரது காரில் கழுத்து இறுகக்கட்டப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி தினேஸ் ஷாப்டர் கண்டுபிடிக்கப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தினேஸ் ஷாப்டர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »