வடமேற்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
குருநாகலின் பல பிரதேசங்களில் கால்நடைகளுக்கு பரவும் தோல்கழலை நோய் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் வடமேற்கு மாகாண பதில் பணிப்பாளர் டீ.ஊ.ளு.பெரேரா இதை குறிப்பிட்டுள்ளார்.