மேலும் அதிகளவில் ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை இங்கிலாந்து வழங்கவுள்ளது.
இது குறித்து உக்ரைன் ஜனாதிபதியின் இங்கிலாந்து விஜயத்தின் போது அறிவிக்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவை திரட்ட உக்ரைன் ஜனாதிபதி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரோம், பாரிஸ், பெர்லின் ஆகிய நகரங்களுக்கு சென்ற அவர் உக்ரைனுக்கு மேலும் கூடுதல் ஆதரவை பெற்றுக் கொண்டுள்ளார்.
மாஸ்கோவிடமிருந்து தங்கள் பகுதிகளை மீட்கவும், ரஷ்ய படையினரை பின்வாங்க செய்யவும் கூடுதல் ஆயுதங்கள் தேவை என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனிய விமானிகளுக்கு பயிற்சியளிக்க இங்கிலாந்து தயாராயிருப்பதாக பிரதமர் ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார்..