பிரேசில் நாட்டை சேர்ந்த லோ-கோஸ்ட் ஏர்லைனின் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவின் சாண்டோஸ் டுமோண்ட் விமான நிலையத்தில் இருந்து போர்டோ அலெக்ரேவுக்கு புறப்பட்டுள்ளது.
விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது அதன் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
விமானம் ஓடுபாதையில் செல்வதில் இருந்து அதன் எஞ்சின் திடீரென தீப்பற்றி எரியும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமான எஞ்சின் தீப்பற்றியதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.