ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறும் தற்போதைய ஜனாதிபதியை மீண்டும் ஒரு பதவிக்காலத்திற்காக தெரிவு செய்வது அவசியம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் என்றால் தற்போதைய ஜனாதிபதி ஐந்து வருடங்களிற்கு ஆட்சி புரியவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியொன்று உருவாகும் என ஜனாதிபதி மூன்று வருடங்களிற்கு முன்னரே எதிர்வுகூறினார் கொவிட் பெருந்தொற்றிற்கு முன்னரே பொருளாதார நெருக்கடியை எதிர்வுகூறினார் என தெரிவித்துள்ள ருவான் விஜயவர்த்தன அவரால் பொருளாதார நிலையை குறிப்பிடத்தக்க அளவிற்கு ஸ்திரமானதாக மாற்ற முடிந்துள்ளது கிரேக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீள்வதற்கு பத்துவருடங்கள் பிடித்தது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கை குறுகியகாலத்திற்குள் ஸ்திரதன்மயை நோக்கி நகர்ந்துள்ளது இதன் காரணமாக விக்கிரமசிங்கவே நாட்டை ஆளவேண்டும் என என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிகளும் பேதங்களை கைவிட்டு நாட்டின் நன்மைக்காக தேசிய கொள்கைகளை உருவாக்க ஐக்கியப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.