முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான சமிந்த சிறிசேனவின் ஒரு கோடி ரூபா பெறுமதியான நீலக்கல் மோதிரம் காணாமல்போயுள்ளதாக பொலனறுவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான இரத்தினக்கல் தங்க மோதிரம், ஐம்பது அமெரிக்க டொலர் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான சமிந்த சிறிசேனவினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை, அதுமல்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே நீலக்கல் மோதிரம் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக அவர் முறைப்பாடளித்துள்ளதாகவும் பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலன்னறுவை பொலிஸார், 6 பவுண் மோதிரம் மற்றும் பணத்தை திருடியவர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.