கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பாரம்பரிய மே தின அணிவகுப்பை இரத்து செய்துள்ளது.
1959 புரட்சிக்குப் பிறகு பொருளாதார காரணங்களுக்காக கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை.
சமீப வாரங்களாக பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகி, பல நாட்களாக வாகன சாரதிகள் காத்திருக்கின்றனர்.