மஹவில, மிரிஸ்வத்த பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்து, வீட்டின் உரிமையாளரை அச்சுறுத்தி 75,000 ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற “எங்கில்லா” என்ற நபரை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண்ணின் கழுத்தில் கூரிய ஆயுதத்தை வைத்து அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, நீண்ட காலமாக தனக்கு அறிமுகமான நபரான "எங்கில்லா” என அழைக்கப்படும் தினேஷ் மஞ்சு ஹேமசிறி நிற்பதைக் கண்டு தான் வீட்டின் கதவைத் திறந்ததாக அந்தப் பெண் கூறினார்.
இதன்போது, திடீரென வீட்டுக்குள் புகுந்த நபர் தனது கழுத்தில் கத்தியை வைத்து கொன்றுவிடுவதாக தெரிவித்து இவ்வாறு பணத்துடன் தப்பிச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.