புத்தளம், தில்லைடிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு எச்சரித்ததையடுத்து ஆத்திரமடைந்த மாணவர் குழுவினர், ஒழுக்காற்று ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளானவர் புத்தளம் பகுதியில் உள்ள பாடசாலையில் ஒழுக்கத்துக்கு பொறுப்பான ஆசிரியர் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குழுவினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.