களுத்துறை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் இன்று (15) மீண்டும் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடுதி உரிமையாளரின் மனைவியை இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க களுத்துறை நீதிவான் நிதா ஹேமமாலி ஹல்பன்தெனிய உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த மாணவியின் நண்பி, நண்பியின் காதலன் மற்றும் பிரதான சந்தேக நபரின் காரை எடுத்துச் சென்ற நண்பர் ஆகியோரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது