Our Feeds


Tuesday, May 16, 2023

SHAHNI RAMEES

மின்சார வாகன இறக்குமதி குறித்து அமைச்சரவை விசேட அனுமதி..!

 

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு

முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

அதன்படி, உரிமம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 23, 2023 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரும் சலுகை கிடைத்துள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தமது வருமானத்தை சட்டப்பூர்வமாக இலங்கைக்கு அனுப்பியிருந்தால் முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

இதன்படி, மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, 01.05.2022 முதல் 31.12.2022 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விரும்பிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »