கைவிடப்பட்ட வீடொன்றில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபரொருவர் இன்று (14) சில குழுவினரால் கோடரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹுரிகஸ்வெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹுரிகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த துசித குமார (32) என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அப்பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைவிடப்பட்ட வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் சிலரால் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக, அந்த பகுதியை சேர்ந்த இருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுரிகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.