ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷை கட்சியிலிருந்து விலக்க கட்சித் தலைவர் ஆலோசித்துள்ளார் என அறியமுடிகின்றது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை பதவியிலிருந்து நீக்க ஆளுங்கட்சி கொண்டுவந்த பிரேரணைக்கு எதிர்ப்பினை வெளியிட கட்சி எடுத்த தீர்மானத்தை மீறி, அதற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள சஜித் ஆலோசிப்பதாக தெரிகிறது.
அதேபோல பிரேரணைக்கு ஆதரவு வெளியிட்ட குமார் வெல்கம .ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் மீது நடவடிக்கைகளை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.