Our Feeds


Saturday, May 13, 2023

News Editor

பாராளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு நியமனம்




 MT New Diamond மற்றும் X-Press Pearl ஆகிய இரு கப்பல்களினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு இலங்கை பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


21 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு நேற்று (12) பாராளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி, இலங்கையின் கடற்பரப்பிற்குள் தனித்தனியாக தீயில் கருகிய இரு சர்வதேச கப்பல்களாலும் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் பணியை இந்த குழு மேற்கொள்ளவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »