ஹபுகஸ்தலாவை அஹஸ்வெவ வீதியில் பைத்துல் முகர்ரம்
மஹல்லாவைச் சேர்ந்த காலம் சென்ற M L M பதுர்தீன் அவர்களின் பேரனும்,காலம் சென்ற பாயிஸ் அவர்களின் அன்புப் புதல்வருமாகிய நாஸிர் அவர்கள் காலம் சென்று விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் நஸ்மீர்,நாஸிக்,ஷிஹாரா,ஜெமீனா,நஸ்மிலா,நஸீஹா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
ஜனாஸா தெஹிளையில்.
நல்லடக்கம் பற்றிய விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.
*தகவல் -தாஜுதீன் PC*
மேலதிக விபரம் 👇
கல்கிஸை பகுதியில் உள்ள உணவகமொன்றின் உரிமையாளர் (பாயிஸ் முகம்மத் நாஸிர் ) கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கும், உணவக உரிமையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் ஜனாசா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.