பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கடந்த 9ம் திகதி அந்த நாட்டின் துணை இராணுவத்தினர் அதிரடியாக கைது செய்தனர்.
இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
மேலும் முகப்புத்தகம், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது பாகிஸ்தான் முழுவதும் இணைய சேவை வழங்கப்பட்டு உள்ளதாக அந்த நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
முகப்புத்தகம், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் அவற்றுக்கான தடை தொடருவதாக தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.