கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று இரவு 10 மணி முதல் நாளை (சனிக்கிழமை) காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை மேலும் அறிவித்துள்ளது.
கொழும்பு 04, 05, 07,08 ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.