எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் கருத்துக்களை திரிபுப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை கொண்டுவர உள்ளதாக புத்த சாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் பௌத்த மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டமை அமைச்சின் நேரடி தலையீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.