தனியார் கல்வி நிறுவனங்களில் கற்க விருப்புவோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
இங்கு பதிவு செய்ப்பட்டுள்ள பொதுஜன அறிவிப்பு ஆணையானது அண்மைகாலமாக குறிப்பிட்ட நிறுவனத்தினால் சமூக வலைத்தளங்களூடகவும் பத்திரிகைகளூடாகவும் பிரசுரிக்கப்படுவருகின்றது. இந்த ஆணையினூடாக குற்றச்சாட்டப்பட்டுள்ள நிறுவனமும், நபரும், அவர் சார்ந்த ஊழியர்களும் இந்த ஆணையை பிரசுரித்த நிறுவனத்தின் வியாபார குறியீட்டினை அல்லது வியாபாரப் பெயரினை பயன்படுத்த வணிக உயர் நீதிமன்றத்தினால் தடைவித்திக்கப்படுள்ளது.
ஆனால் இங்கு குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரும் அவர் சார்ந்த நிறுவனமும் நிந்தவூர், கல்முனை, மட்டக்களப்பு, கண்டி, மற்றும் தெகிவளை, மொறட்டுவ உட்பட பல இடங்களில் நிறுவனங்களை அமைத்து சட்டரீதி அற்ற வகையில் மாணவர்களை அந்நிறுவனத்தில் சேர்த்து பெரும் தொகை பணம் வசூலித்துள்ளதாகவும் இந்த அறிக்கையினூடாக தெரியவருகின்றது.
இவ்வாறு ஒரு சிலர் செய்கின்ற நடவடிக்கைகள் காரணமாக பல மாணவர்களும் பெற்றோர்களும் பாதிக்கப்படுகின்றனர். தனியார் உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்கமைக்கும் அரச கட்டமைப்பின் தோல்வியும் இவ்வாறான நபர்களின் செயற்பாடுகளுக்கு துணைபோகின்றது. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக செயற்படும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியினை தொடரும் மாணவர்களின் பணமும் அவர்களின் காலமும் வீணடிக்கப்பட்டு வருகின்றது.
ஆகவே தனியார் உயர்கல்வியினை தொடரும் மாணவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். மக்களுக்கான விளிப்புணர்வுப் பதிவாக இதனை பதிவு செய்கின்றோம்.