உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வரும் ஒகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் .அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை - 2022 பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாகவும், விஞ்ஞான பாடங்களின் விடைத்தாள் மதிப்பீடு ஜூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்த பின்னர் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜயசுந்தர குறிப்பிட்டார்.