கம்பளை – எல்பிடிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவரை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.
இதில், குறித்த யுவதி துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், கழுத்தை நெரித்ததால் தான் மரணம் ஏற்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இதில் கைதான சந்தேகநபர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் கம்பளை பதில் நீதிவான் முன்னிலையில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.