இந்தியாவின் கர்நாடக மாநில கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முன்னிலை கிடைத்திருக்கறது. பா.ஜ.க. மிகக் கடினமான முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியைத் தழுவிவருகிறது. என்ன நடந்தது கர்நாடகாவில்?
தேர்தல் ஆணைய இணைய தளம் தரும் தகவல்களின்படி கர்நாடக மாநிலத்தில் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான முன்னிலைபெற்றிருக்கிறது. ஆளும் பா.ஜ.க. குறைவான இடங்கலில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்திருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு இந்த முறை அத்தகைய வெற்றி கிடைக்கவில்லை.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 38 ஆண்டுகளில் அதாவது 1985க்குப் பிறகு எந்தக் கட்சியும் இன்னொரு முறை ஆட்சிக்கு வர முடியாது என்ற போக்கு இந்த முறையும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.