நாட்டில் எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் மருந்துகளின் விலையை 10% தொடக்கம் 15% வரை குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டொலரின் பெறுமதி வீழ்ச்சி குறித்த தரவுகளை ஆராய்ந்து, மருந்து விலை திருத்தம் தொடர்பான அறிக்கையைச் சுகாதார அமைச்சரிடம் உடனடியாக வழங்கவுள்ளதாகவும் தேசிய மருந்துகள் ஒழுங்கு முறைப்படுத்தும் அதிகாரசபை (NMRA) கூறியுள்ளது.