ஏ-9 வீதியில், ஆனையிறவு வீதித்தடையில் வைத்து,
போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவரும், முச்சக்கரவண்டிச் சாரதியும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம், ஏ-9 வீதியில், ஆனையிறவு வீதித்தடையில் வைத்து பளை பொலிஸாரால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 24 வயதான பல்கலைக்கழக மாணவரும், மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 5,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 250, 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 27 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர், முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அடிப்படையில், சந்தேகநபர்களின் வீட்டில் இருந்து நேற்றைய தினம், 5,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 5 மீட்கப்பட்டுள்ளன.
அவர்கள், நேற்றைய தினம் கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில், முற்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 17ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.