பாணந்துறை, வெகட, பஹங்கம பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் அறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று (29) பிற்பகல் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் இந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும் அவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இருந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாணந்துறை தெற்கு பொலிஸார் இந்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தேவையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.