Our Feeds


Wednesday, May 24, 2023

ShortNews Admin

மெட்டா நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்!



பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிடம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான Irish Data Protection Commission (டிபிசி) நடத்திய விசாரணையில், ஐரோப்பிய ஒன்றிய பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவுக்கு வழங்கிவந்தது தெரியவந்தது.


இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஐரோப்பிய யூனியன் பயனாளர் தரவுகளை அமெரிக்காவுக்கு அனுப்பியதற்காக ஐரோப்பிய Irish Data Protection Commission மெட்டா நிர்வாகத்துக்கு ஒட்டுமொத்தமாக 1.2 பில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.


இது குறித்து மெட்டா நிறுவனம் தெரிவிக்கையில் ,


'ஐரோப்பிய யூனியனின் இந்த நடவடிக்கை நியாயமற்றது. முற்றிலும் குறைபாடுடையது. பிறநிறுவனங்களுக்கு ஆபத்தான முன்னுதாரணத்தை இது ஏற்படுத்தியுள்ளது.


இந்த விவகாரத்தில் மெட்டா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது' என்று தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »