Our Feeds


Tuesday, May 30, 2023

News Editor

இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில்

 

BIMSTEC புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டில் இந்தியாவிலுள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தில் கீழ்வரும் கற்கைநெறிகளைத் தொடர்வதற்காக இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 

• வரலாற்று கற்கைகளில் MA மற்றும் PhD • பௌத்த கற்கைகள், தத்துவம் மற்றும் மத ஒப்பீட்டு கற்கைகளில் MA மற்றும் PhD

• இந்து கற்கைகளில் (சனாதன தர்மம்) MA மற்றும் PhD

• சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் கற்கைகளில் MSc மற்றும் PhD

• நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்தில் MBA

• உலக இலக்கியம் (ஆங்கிலம்) MA மற்றும் PhD

 

இப்புலமைப்பரிசில் திட்டமானது அனுமதிக் கட்டணம், இக்கற்கை நெறிக்கான கல்விக்கட்டணம், வதிவிட செலவுகள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு ஆகியவற்றுடன் ஒரு தடவைக்கான இருவழி பயணக் கொடுப்பனவையும் உள்ளடக்கியுள்ளது.

 

இத்திட்டம் குறித்த மேலதிக தகவல்களை https://nalandauniv.edu.in/admissions/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது foreignstudents@nalandauniv.edu.in.  என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் பெறமுடியும்.

 

விண்ணப்பிக்க விரும்புவோர் 2023 ஜூன் 10 ஆம் திகதிக்கு முன்னதாக (https://nalandauniv.edu.in/admissions/) இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »