பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது 120-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஊழல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் இம்ரான்கானை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
லாகூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான்கானை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஆனால், உயர்நீதிமன்றம் தலையிட்டதையடுத்து இம்ரான்கான் விடுதலையானார். தற்போது இம்ரான்கான் பிணையில் உள்ளார். அதேவேளை தனது ஆதரவாளர்கள் வீதிகளில் இறக்கி போராட வேண்டுமென இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், இம்ரான்கானின் மனநிலையில் சந்தேகம் இருப்பதாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுதாரத்துறை அமைச்சர் அப்துல் குவாதிர் தெரிவிக்கையில்,
இம்ரான்கானின் மனநிலை சந்தேகம் எழுப்புகின்றது. இம்ரான்கான் உடலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மதுப்பழக்கம், போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.