அவிசாவளை - தல்துவ பகுதியில் இன்று (26) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
டுபாயில் இருப்பதாக கூறப்படும் "மன்ன ரமேஷ்" என்பவரின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவரினால் இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.